மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று 75 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த நிலையில், நாட்டில் நேற்றிரவு பெய்த கடும் மழை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் நில்வள கங்கை சில இடங்களில் பெருக்கெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், அக்குரஸ்ஸ சியம்பலாண்டுவ பிரதான வீதியின் பாணதுகம பகுதி நீரில் மூழ்கியுள்ளதாகவும் இதனால் குறித்த வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.