அனைத்து அரச நிறுவனங்களும் அரசாங்கத்திற்குச் சொந்தமான கட்டிடங்களில் மாத்திரமே செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையை சமர்ப்பித்த உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து அரச நிறுவனங்களும் வரி செலுத்துவோரின் பணத்தினாலேயே பராமரிக்கப்படுவதாகத் தெரிவித்த திரு.விஜேசிறி,
அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடத்திற்கு மாதாந்தம் 13 இலட்சம், தேசிய லொத்தர் சபைக்கு மாதம் 65 இலட்சம், கொள்ளுப்பிட்டியில் உள்ள மின்சார அமைச்சுக்கு மாதம் 20 இலட்சம், மின்சார சபை நகர அலுவலகத்திற்கு மாதம் 20 இலட்சம். , மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கட்டிடத்திற்கு மாதாந்தம் 20 இலட்சம் என பணம் வீணடிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.