ஹேரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக்கொண்ட இளம் அர்ச்சகர் ஒருவர் யாழில் உயிரிழந்துள்ளார்.
நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய அர்ச்சகரே இன்று உயிரிழந்துள்ளார்.
ஆலய பூஜை முடித்துவிட்டு வீட்டுக்கு அருகில் உள்ள இடத்தில் ஊசிமூலம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்கான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் சம்பவம் தொடர்பாக மரண பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.