டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ ஜக் டோர்சி( Jack Dorsey) அண்மையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்திய அரசினால் தான் மிரட்டப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.
இது உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த செவ்வியில் ”இந்தியாவில் இடம்பெற்ற விவசாயிகளின் போராட்டத்தின் போது சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்குமாறு டுவிட்டர் நிறுவனத்தை இந்திய அரசு மிரட்டியது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்,ஜக் டோர்சியின் கருத்தை மறுத்துள்ளதோடு அவரது குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை எனவும் ”டோர்சி திடீரென விழித்து கொண்டு ஏதேதோ உளறுகின்றார் ” எனவும் தெரிவித்துள்ளார்.