Kryvyi Rih நகரின் மீது ரஷ்யா நடத்திய பாரிய ஏவுகணை தாக்குதலில் குறைந்தது பத்து பேர் கொல்லப்பட்டுள்ள அதேநேரம் 28 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
உக்ரைன் எல்லைக்கு அருகிலுள்ள ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உள்ள கிராமங்களை ஷெல் தாக்கியதில் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த 28 பேர் சாதாரண மற்றும் பலத்த காயத்ததோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தாக்குதலுக்குப் பிறகு உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிக்க மீட்புப் பணிகள் தொடர்ந்தும் இடமபெற்று வருவதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதேநேரம் இன்று அதிகாலை முதல் கிய்வ் பிராந்தியத்தில் ரஷ்யாவின் தாக்குதல்களை முறியடிக்க தங்கள் வான் பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்தியுள்ளதாக உக்ரேனிய இராணுவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.