நாடு பெற்றுக் கொண்டுள்ள கடனை மீள செலுத்த முடியாத நிலைமைக் காணப்படுவதால், பல அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “ கடனை எவ்வாறு மீளச்செலுத்துவது என்பது தொடர்பாகவே அரசாங்கம் தீர்க்கமாக ஆராய்ந்து வருகிறது.
கடனை திருப்பிச் செலுத்தாத காரணத்தினால் எம்மால், அபிவிருத்திச் செயற்பாடுகளுக்குக்கூட கடனை பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் என்ற வகையில், வீதிகளுக்கு என்னால் தார் போட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
பாலமொன்று உடைந்துவிழுந்தால் கூட, அதனை நிர்மாணிக்க முடியாமல் உள்ளது.
ஆசிய, அபிவிருத்தி வங்கியோ, உலக வங்கியோ ஒரு ரூபாயைக்கூட கடனாகத் தரமாட்டார்கள்.
இதுதான் இப்போதுள்ள பெரிய பிரச்சினை” என்றார்.