மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான டுபாயில் வெயிலில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி அந்நாட்டு அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி இம்மாதம் 15ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி வரை ஊழியர்கள் நண்பகல் 12.30 மணி முதல் மாலை 3 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்திற்கு “மிட் டே பிரேக்” என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்களின் நலன் கருதியே இத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.