எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கைக்கு அனைத்து கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையிலான பரிந்துரைகள் மற்றும் சில தொகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டும் சில தொகுதிகள் தனியாக நிர்ணயிப்பதற்கும் குறித்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் உள்ளூராட்சித் தேர்தலை தொகுதி முறைமைக்கு மாறாக பழைய தேர்தல் முறைமையின் அடிப்படையில் நடத்துவதற்கு பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் விருப்பம் தெரிவித்தாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சித் தேர்தலில் வேடபாளர் பட்டியலில் நூற்றுக்கு 25 வீதத்தை இளைஞர் பிரதிநிதிகளுக்கு ஒடுக்குவதற்கான யோசனையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர குறிப்பிட்டுள்ளார்.