முட்டை மற்றும் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் பாண் உள்ளிடட் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்பிரகாரம் ஒன்றின் விலையை 35 ரூபாயாகவும் கோதுமை மாவின் விலையில் 180 முதல் 170 ரூபாய் வரை குறைக்க வேண்டும் என அச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்தோடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள கோதுமை மா இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அச்சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.