ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஏனென்றால், திருடப்பட்ட பணத்தை மீட்கவோ, சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்கவோ போதுமான சட்டங்கள் அதில் இல்லை என அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான காரணங்களால் ஊழலுக்கு எதிரான சட்டமூலத்திற்கு ஆதரவளிக்க முடியாது என அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்றுவது என அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த சட்டமூலத்திற்கு எந்த ஒரு பிரதிநிதியும் எதிரப்பை வெளியிட மாட்டார்கள் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.