பொருளாதாரத்தால் சரிந்த நாட்டை மிகக் குறுகிய காலத்தில் உயர்த்திய ஜனாதிபதி ரணில் விக்ரம்சிங்க்வின் தொலைநோக்குப் பார்வை பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளை விடப் பெரியது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
காலி மாவட்டத்தின் பத்தேகம மற்றும் அக்மீமன ஆகிய தொகுதிகளின் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அக்கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வீழ்ச்சியடைந்த தேசத்தை மீளக் கட்டியெழுப்பவும், அதனை உலக நாடுகளுடன் முன்னோக்கி கொண்டு செல்லவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன்னர் தலைமைத்துவத்தை பொறுப்பேற்று நாட்டை உலகிற்கு முன்னுதாரணமாக மீண்டும் சரியான பாதையில் கொண்டு வந்தவர் ரணில் விக்ரமசிங்கவே என்றும் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.