சீன அதிகாரிகளுடனான இரண்டு நாள் பேச்சுவார்த்தையின் ஓர் அங்கமாக, அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன், சீன வெளிவிவகார அமைச்சர் குயின் கேங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஏறக்குறைய ஐந்தாண்டுகளில் அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பதோடு பெய்ஜிங்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க வான்வெளியில் சந்தேகத்திற்கிடமான சீன உளவு பலூன் பறந்ததைத் தொடர்ந்து, பிளிங்கன் வருகை ஒத்திவைக்கப்பட்ட கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்குப் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தொடரும் பதட்டமான உறவை உறுதிப்படுத்துவதே இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய குறிக்கோள் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனா தனது பிராந்தியம் என கருதும் தாய்வானுடன் அமெரிக்கா நெருங்கிய உறவைப் பேணி வருவது இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் விரிவடைய காரணமாக அமைந்திருந்தது.