சந்தையில் கோழி இறைச்சியின் விலையை வர்த்தகர்கள் வேகமாக அதிகரித்துள்ளதகால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
குறிப்பாக ஒரு கிலோ கோழி இறைச்சிக்கு 1,450 முதல் 1600 ரூபாய் வரை வர்த்தகர்கள் அறவிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கோழி இறைச்சியின் விலை மற்றும் பலவகையான உணவு வகைகளின் விலை உயர்வால் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், சந்தையில் இன்னும் முட்டைக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என தெரிவிக்கப்படுகின்றது.
வர்த்தமானி மூலம் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.