பிராம்ப்டனில் சில காலிஸ்தானி பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட அணிவகுப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் பிரம்ப்டன் நகரில் அதன் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைக் கொண்டாடியதாகக் கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் வெளிவந்தது
இதனை அடுத்து தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் மீது கனடா மெத்தனமாக நடந்துகொள்வதற்காக கனடாவை இந்தியா கடுமையாக சாடியது.
கனடா தனது மண்ணில் தீவிரவாதிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடம் கொடுப்பது இந்தியாவுடனான இருதரப்பு உறவுக்கோ அல்லது சொந்த நலனுக்கோ நல்லதல்ல என வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருந்தார்.
1984இல் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதில் இருந்து, காலிஸ்தானின் கோரிக்கை இந்தியாவில் ஒரு பிரச்சினையாக இல்லை, பாகிஸ்தானின் ஆதரவுடன் காலிஸ்தானி தீவிரவாதிகள் கனடாவில் சுதந்திரமாக இயங்கி வருகின்றனர். இந்தியாவிற்கு வெளியே கனடாவில் உள்ள சீக்கியர்களின் எண்ணிக்கை 800,000ஆகும் இது 2021 இல் கனடாவின் மக்கள் தொகையில் 2.1சதவீதமாகும்.
இந்திரா காந்தி 1984இல் தம்தாமி தக்சல் தலைவர் ஜேர்னைல் சிங் பிந்திரன்வாலே மற்றும் அவரது ஆதரவாளர்களை புனித தலத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் நடந்த இராணுவ நடவடிக்கைக்கு பழிவாங்கவே அவரது இரண்டு சீக்கிய மெய்க்காப்பாளர்களால் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார்.