பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை 10 ரூபாயினால் குறைப்பது குறித்து பரிசீலிக்குமாறு பேக்கரி உரிமையாளர்களிடம் வர்த்தக, மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ, கோரிக்கை விடுத்துள்ளார்.
பேக்கரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அரசாங்கம் பல சலுகைகளை வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அமைச்சரின் இந்த கோரிக்கை தொடர்பாக ஆராய்ந்து எதிர்வரும் நாட்களில் அறிவிப்பை வெளியிடுவதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன உறுதியளித்துள்ளார்.