கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க, களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார திருவிழா உற்சவம் சனி இரவு ஆரம்பமானது.
இலங்கையில் மிகவும் பண்டைய ஆலயங்களுள் ஒன்றான பெருமையினையும் கொண்ட ஆலயமாக காணப்படும் களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார திருவிழா பத்து தினங்கள் நடைபெறவுள்ளது.
கடந்த சனிக்கிழமை சமய கிரியைகளுடன் ஆரம்பமாகி கும்பபூஜை, யாகபூஜை நடைபெற்று சுயம்புலிங்கப் பிள்ளையாருக்கு விசேட அபிசேகம் மற்றும் பூஜைகளும் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள சுயம்புலிங்கப்பிள்ளையார் மற்றும் முருகப்பெருமான், சிவன் ஆகியோருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் உள்வீதி வெளிவீதியுலாவும் நடைபெற்றது.
எதிர்வரும் 26 ஆம் திகதி ஆலயத்தின் சிறப்புமிக்க ஆனி உத்தர தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.