அரிசி விலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுடன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்க்கட்சித் தலைவர் 220 ரூபாய்க்கு அரசி விற்பனை செய்யப்படுவதாக இங்கே கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் நீண்ட காலமாக கடைகளுக்குச் செல்ல வில்லை என்று நான் நினைக்கிறேன்.
வீதியோரங்களில் இருக்கும் சாதாரண கடைகளில்கூட, 125 ரூபாய்க்கு தான் அரிசி விற்கப்படுவதாக பதாகைகள் காட்சி படுத்தப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவராக இதற்கு முன்னர் இருந்தவர்கள், கடைகளுக்குச் சென்று ஆராய்ந்த பின்னர்தான் விலைகள் தொடர்பாக கருத்து வெளியிட்டார்கள்.
எனவே, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் யாரோ ஒருவர் கூறும் விலைகளை கேட்டுக் கொண்டுவந்து இங்கே கருத்து வெளியிட வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
அல்லது பாஸ்மதி, கிரி சம்பா போன்ற அரிசிகளின் விலையைக் கூறுகிறாரோ தெரியவில்லை.
எவ்வாறாயினும், நாட்டின் பெரும்பாலானோர் சிவப்பரிசி, அல்லது பச்சையரிசியைத்தான் உணவுக்காக எடுத்துக் கொள்கிறார்கள்.
இந்த அரிசி வகைகள், 200 ரூபாய்க்கு விற்கப்படுவதில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.