அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் இரு வைத்தியர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அதே வைத்தியசாலையில் சிகிக்சை பெற்றுவருகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடமையின் போது குறித்த இரு வைத்தியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கமே இம்மோதல் உருவாவதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், கோரிக்கை விடுத்துள்ளது.