ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை 315 ரூபாயாக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் டொலரின் கொள்விலை 297 ரூபாயாக பதிவாகியுள்ளத்து.
இதேவேளை ஸ்ட்ரேலிங் பவுன் ஒன்றின் விற்பனை விலை 403 ஆகவும் கொள்விலை 380 ஆகவும் சுவிஸ் பிராங் ஒன்றின் விற்பனை விலை 353 ஆகவும் கொள்விலை 329 ரூபாயவும் பதிவாகியுள்ளது.
மேலும் வளைகுடா நாடுகளில் குவைத் தினார் 996 ரூபாயாகவும் பஹரைன் தினார் 811 ரூபாயாகவும் ஓமான் ரியால் 794 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.