புனோம் பென்னின் புறநகரில் உள்ள ஒரு குழியில் இருந்து பிரபல தென்கொரிய இணைய பிரபலம் ஒருவரின் உடலை மீட்டதை அடுத்து சீன தம்பதியினர் மீது கம்போடிய நீதிமன்றம் கொலைக்குற்றம் சாட்டியுள்ளது.
கம்போடிய பொலிஸ் அறிக்கையின்படி, அஹியோங்கின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, மருத்துவ வெளிநோயாளர் பிரிவை நடத்தும் சீன தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.
30வயதான வென்ஷாவோ, மற்றும் 39 வயதான ஹுய்ஜுவான், ஆகியோர் குறித்த பெண் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போது இறந்து விட்டதாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்ததாக அறிக்கை கூறியது.
‘சித்திரவதையுடன் கூடிய கொலை’ குற்றம் சாட்டப்பட்டது என்று வழக்கறிஞர் பிளாங் சோபால் தெரிவித்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும்.
குறித்த பெண்மணியை 250,000க்கும் அதிகமான பின் தொடர்பவர்களைக் கொண்ட தென்கொரிய காணொளி சேவைக்கு அஹியோங் செல்வாக்கு செலுத்தியவராவார்.
அவரது உண்மையான பெயர் பியூன் ஆ-யோங் மற்றும் அவருக்கு 33வயது என்றும் அவர் மார்ச் மாதம் சமூக ஊடகங்களில் நடவடிக்கையை கைவிடுவதாகவும், ‘தற்போதைக்கு சாதாரண மனிதராக வாழப் போவதாகவும்’ பதிவிட்டுள்ளார்.
உள்ளுர் அதிகாரிகள் ‘துரதிர்ஷ்டவசமான சம்பவம்’ குறித்து விசாரணை நடத்தி வருவதாக தென் கொரியாவின் வெளியுறவு அமைச்சின் ஊடக பேச்சாளர் லிம் சூ-சுக், கூறினார்.