சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நபர் ஒருவர் தனது மருமகளைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவ தினத்தன்று அவரது மருமகள் மிகவும் குட்டையான ஆடைகளை அணிந்திருந்ததாகவும் இதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் ஆத்திரமடைந்த மாமனார் மருமகளின் மீது சூடான எண்ணெயை ஊற்றியதாகவும் கூறப்படுகின்றது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து தனது கணவரிடம்தெரிவித்தபோது, அவரும் தந்தையின் செயலை ஆதரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது கணவரை விவாகரத்து செய்யத் தான் திட்டமிட்டுள்ளதாக அப் பெண் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.