அவுஸ்திரேலியாவின் டெர்வெண்ட் ஆற்றில் 3 பாகை செல்சியஸ் உறையும் நீரில் 2000 பேர் நிர்வாணக் குளியளில் ஈடுபட்டமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 22-ஆம் திகதி, ஆண்டிலேயே குறைந்த பகல் பொழுதை கொண்ட நாள் என்பதால் அதனை கொண்டாடும் விதமாக, கடந்த பத்தாண்டுகளாக இவ்விநோத செயலில் அந்நாட்டு மக்கள் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இது குறித்து வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.