சவுதி அரேபியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தொட்டியொன்றுக்குள் தோடம்பழப் பானத்தை நிறப்பி அதனை தான் வளர்த்துவரும் ஒட்டகங்களுக்கு அளித்து வரும் சம்பவம் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவில் அண்மைக்காலமாகக் கடுமையான வெப்பநிலை நிலவி வரும் நிலையில் , வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தான் வளர்த்துவரும் ஒட்டகங்களைக் காப்பாற்றுவதற்காகவே அவர் இவ்வாறு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் Tang எனப்படும் தோடம் பழப் பானத்தை அவர் தனது ஒட்டகங்களுக்கு வழங்கி வருவதாகவும், இதன் காரணமான தனது ஒட்டகங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்து வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.