இம்மாதத்தின் முதல் 20 நாட்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 61,183 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இம்மாதம் 87,521 சர்வதேச பார்வையாளர்களை கவர்ந்திழுப்பதை சுற்றுலாத்துறை இலக்காகக் கொண்டிருந்த நிலையில், இலங்கை தனது இலக்கில் 70 சதவீதத்தை அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இம் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் தினசரி வருகை சராசரியாக 3,059 ஆக இருந்துள்ளது எனவும் முதல் வாரத்தில், 19,365 சுற்றுலாப் பயணிகளும், 2 ஆவது வாரத்தில் 20,541 சுற்றுலாப் பயணிகளும், 3 ஆவது வாரத்தில் 20,986 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கைக்கு வருகை தரும் நாட்டவர்களில் இந்தியா முதல் இடத்திலும், ரஷ்யா 2 ஆவது இடத்திலும், ஐக்கிய அரபு இராச்சியம் 3 ஆவது இடத்திலும், அவுஸ்திரேலியா 4 ஆவது இடத்திலும், சீனா 5 ஆவது இடத்திலும் உள்ளது.
அதே சமயம் கனடா, ஜேர்மனி, அமெரிக்கா, மாலத்தீவுகள் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.