கடந்த 9 நாட்களில் 9,158 பேர் ஒன்லைன் மூலமாகக் கடவுச்சீட்டினைப் பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பித்திருந்ததாகக் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷா இலுக்பிடிய (Harsha Illukpitiya) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த 15 ஆம் திகதி முதல் ஒன்லைன் முறை மூலம் கடவுச் சீட்டினைப் பெற்றுக் கொள்வதற்கான முறை அறிமுகப் படுத்தப்பட்டது.
இதற்கு முன்னர் சாதாரண நடைமுறையின் கீழ் கடவுச் சீட்டினை வழங்க 14 வேலை நாட்கள் செல்லும். எனினும் இப் புதிய முறை மூலம், விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த மூன்று நாட்களுக்குள் கடவுச் சீட்டுக்களை வழங்கமுடியும்.
அதுமட்டுமல்லாது ஆரம்பகாலத்தில் ஒரு நாள் சேவைக்கான கட்டனமாக ரூபாய் 20,000 இருந்தது. ஆனால், இந்த ஒன்லைன் முறை மூலம் குறித்த கட்டணம் 15,000 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.