காலி முகத்திடலில் உள்ள யாசகர்களை ஹம்பாந்தோட்டையில் உள்ள சமூக சேவைகள் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவர்களை ரிதியகமவில் உள்ள புனர்வாழ்வு நிலையத்திற்கு இடமாற்றம் செய்ய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
காலி முகத்திடலில் யாசகர்களால் பொதுமக்கள் துன்புறுத்தப்படுவதாக எழுந்த முறைப்பாடுகளை அடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் இலங்கை பொலிஸாரும் இணைந்து இந்த நடவடிக்கைகள் இஎடுக்க வேண்டும் என அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.
காலி முகத்திடலில் சுமார் 150 யாசகர்கள் மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த யாசகர்கள் ரிதியகம மையத்தில் தங்கியிருக்கும் போது அவர்களுக்கு தேவையான தங்குமிட வசதிகள், உணவு மற்றும் பானங்களை வழங்குவதற்கான நிதியுதவியும் வழங்கப்படவுள்ளது.
இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் ஊடாக வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பணிப்புரை விடுத்துள்ளார்.