தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு எனபவற்றுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எல்.டி.பி. தெஹிதெனிய, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அரிசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து , சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிக் காலம் நிறைவடையும் எனினும் புதிய அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்ட சந்தர்ப்பத்தில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமையால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர் நியமிக்கப்படவில்லை.
எனினும் தற்போது தேர்தல் கால வரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளமையால் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.