பிரான்ஸின் நாந்த்ரே பகுதியில் நேற்று முன்தினம் வேகமாகப் பயணித்த கார் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 17 வயதான கறுப்பினச் சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில் பிரான்ஸின் பலபகுதிகளிலும் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இப்போராட்டங்களின் போது போராட்டக்காரர்களால் பொலிஸ் நிலையங்கள், பாடசாலைகள் போன்ற அரசுக்கு சொந்தமான பல கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டன.
மேலும் கார்கள், குப்பைத்தொட்டிகள் போன்றவையும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. அதுமாத்திரமன்றி இவ்வன்முறைச் சம்பவங்களின் போது பொலிஸாருக்கும் , போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 24 பொலிஸார் காயமடைந்தனர்.
இதனால் போராட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் பொலிஸார் கலைத்தனர்.
மேலும் வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து பரீஸ், நாந்த்ரே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டதால் அங்கு தொடர்ந்தும் பதற்ற நிலை நீடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.