யாழ்ப்பாணத்தில் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் சிறுவர்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக யாழ்ப்பாணம், சுன்னாகம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 6 முறைப்பாடுகளும் சிறுவர்களுக்திரான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 53 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றிருந்தன
எனினும் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் கடந்த மே மாத இறுதிவரை பெண்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 04 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு கடந்த ஐந்து மாதங்களில் சிறுவர்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 53 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அதன்படி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் 06 முறைபாடுகளும் சுன்னாகத்தில் 14 முறைபாடுகளும் மானிப்பாயில் 04 முறைபாடுகளும் கோப்பாயில் 06 முறைபாடுகளும் கொடிகாமத்தில் 03 முறைபாடுகளும் சாவகச்சேரியில் 06 முறைபாடுகளும் வட்டுக்கோட்டையில் 05 முறைபாடுகளும் ஊர்காவற்துறையில் 07 முறைபாடுகளும் கிடைத்துள்ளன.
வீடுகள், பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களில் 18 வயதுக்குட்பட்டோரை அச்சுறுத்தல், துன்புறுத்துதல், காயப்படுத்துதல் மிரட்டுதல், சித்திரவதைக்கு உட்படுத்துதல், உள ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தல், பாலியல் ரீதியாக துன்புறுத்தல், பாலியல் ரீதியான தொல்லை போன்ற வன்முறை சம்பவங்கள் வீடுகள், பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பிலாக 53 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுடன் தொடர்புடையோர் விசாரணைக்குட்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு பலர் நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.