மெக்சிகோவில் அண்மைக்காலமாக வெப்பநிலை உயர்வடைந்துகொண்டே செல்கின்றது. குறிப்பாக கடந்த 3 வாரகாலமாக அந்நாட்டின் பல பகுதிகளிலும் வெப்பநிலை 50 பாகை செல்சியஸ்(122 ஃபாரன்ஹீட்) வரை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக அந்நாட்டின் பலபகுதிகளிலும் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வெயிலின் உஷ்ணம் தாங்க முடியாமல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர் எனவும், எனினும் வீட்டுக்குள் நிலவும் வெப்பத்தால் அவர்கள் தவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வெப்ப அலையில் சிக்கி கடந்த 2 வாரங்களில் மெக்சிகோவில் 100 பேர் வரை உயிரிழந்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் அந்நாட்டின் வட மாகாணப் பகுதிகளில் வசிப்பவர்களே வெயிலின் தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.