ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதலாம் திகதி மேற்கொள்ளப்படும் தேசிய பேருந்துக் கட்டணத் திருத்தத்தின்படி, இந்த ஆண்டு கட்டணத்தில் மாற்றம் இருக்காது என்று பேருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன.
பேருந்து கட்டணங்கள் 7 வீதம் அதிகரிக்கலாம் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ள போதிலும் இம்முறை கட்டண அதிகரிப்பு இடம்பெறாது என தனியார் பேருந்து சங்கம் கூறியுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
மே முதலாம் ஆம் திகதி இடம்பெற்ற எரிபொருள் விலை திருத்தத்தின் பின்னர், ஜூலை 1 ஆம் திகதி பேருந்து கட்டணத்தை குறைக்க முடியும் என முன்னதாக அவர் தெரிவித்திருந்தார்.
மே மாதம் சிலோன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 135 ரூபாயினாலும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாயினாலும் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.