கடந்த 1960 ஆம் ஆண்டில் இருந்து பல்லைக்கழகங்களில் மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பப்படிவங்களில் இனத்தை குறிப்பிடுவதற்கான நடைமுறை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் குறித்த நடைமுறைக்கு உச்சநீதிமன்றம் அதிரடி தடைவித்துள்ளது. அத்துடன் “மாணவர்கள் அவர்களுடைய அனுபவங்கள் மற்றும் திறமைகளின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும். இனத்தின் அடிப்படையில் அல்ல எனவும் ” உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜோன் ரொபர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
மொத்தமாக 9 நீதிபதிகள் கொண்ட குறித்த அமர்வில் 6 நீதிபதில் தடைக்கு ஆதரவு அளித்திருந்த நிலையில் மூவர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்