மதுபான போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாயினாலும் பியர் ஒன்றின் விலை 50 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக காலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, கலால் வரி அதிகரிப்பு காரணமாக 4 வகைகளின் கீழ் ஒரு சிகரெட்டின் விலை 5 ரூபாய், 15 ரூபாய், 20 ரூபாய், மற்றும் 25 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.