உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானம் 60 மேலதிக வாக்குகளால் நாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி சற்றுமுன்னர் இடம்பெற்ற குறித்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் கிடைத்திருந்தன.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ராமேஸ்வரன், வடிவேல் சுரேஷ், அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரும் ஆதரவாக வாக்களித்தனர்.
இதேநேரம் ஏ.எல்.எம். அதாவுல்லா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கு.திலீபன், எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.