தங்கம் மற்றும் கையடக்கத்தொலைபேசிகள் ஆகியவற்றை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்த குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தொடர்பில் இலங்கை சுங்க திணைக்களம் முழுமையான அறிக்கையை வழங்கியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை அடுத்த கட்சித் தலைவர் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகர் விடுத்த கோரிக்கைக்கு அமைய இலங்கை சுங்க திணைக்களம் இந்த அறிக்கையை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது,