உலகின் மிகப்பெரிய இராணுவக் கூட்டமைப்பான நேட்டோ அமைப்பின் உச்சி மாநாடு லிதுவேனியாவின் தலைநகரான வில்னியசில் நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
இம்மாநாட்டில் நேட்டோ உறுப்பினராக உள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
அந்தவகையில் குறித்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள அமெரிக்க ஜனாதிபதி பைடன், லிதுவேனியாவுக்குப் புறப்படுவதற்கு முன்னர் நேற்றைய தினம் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
மேலும் அங்கு பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் மன்னர் சார்லஸை சந்தித்துப் பேசவுள்ளார். அத்துடன் பிரதமர் ரிஷி சுனக் உடனான சந்திப்பின்போது உக்ரேன்-ரஷ்யப் போர் நிலவரம், நேட்டோவில் உக்ரேனை இணைப்பது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.