UPDATE 01 மனம்பிட்டியவில் இடமபெற்ற பேருந்து விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட பேருந்தின் சாரதியை எதிர்வரும்24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
UPDATE மன்னம்பிட்டியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ஏறாவூரைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட மூவரும் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனும் ஆனைமடுவ கலாவத்தை பிரதேசங்களைச் சேர்ந்த இரு பல்கலைக்கழக மணவர்கள் உள்ளிட்ட 11 பேரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை பகல் ஒரு பெண் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆக அதிகதித்துள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட்ட சாரதி, போதை பொருள் பாவித்துள்ளாரா என்பது தொடர்பாக விசாரணைகள் இடமபெற்று வருவதாகவும் மன்னம்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.