ஒன்லைனில் பொருட்களை விநியோகம் செய்து கொண்டிருந்த இரண்டு சரக்கு விநியோக சேவை நிறுவனங்களின் பணியாளர்கள் இருவர், மரம் வெட்டிக் கொண்டு இருந்தவர்களிடமிருந்து சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தினையடுத்து குறித்த கும்பலை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை இப்பலோகம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இப்பலோகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனபுர யாய 05 ஆம் இலக்க பகுதியில் இன்று பிற்பகல் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பாதிப்படைந்த தொழிலாளர்கள் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து இந்த திட்டமிட்ட குற்றத்தை செய்த சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்காக இப்பலோகம பொலிஸ் நிலையத்தினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.