மளிகைப் பொருள்கள், காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் உணவகங்களில் உணவு பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், 5-10 சதவீதம் வரை விலை அதிகரிக்கும் நிலை இந்தியாவில் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டுமில்லாது, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும், காய்கறிகள் விளைச்சல் குறைந்துள்ளதால் அவற்றின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இன்றைய சந்தை நிலவரப்படி கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ள்து. அதேபோல, வெங்காயம் உள்ளிட்ட பிற காய்கறிகளின் விலையும் உச்சத்தை எட்டியுள்ளது. அதனால், உணவகங்களில் விலை உயரும் என்று பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.