இமாச்சலப் பிரதசத்தில் அண்மைக்காலமாகப் பெய்துவரும் கடும் மழைகாரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் 16 பேரைக் காணவில்லை எனவும், 100 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் 492 கால்நடைகள் உயிரிழந்துள்ளன எனவும் மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக வட இந்தியாவில் கடும் பெய்து வருகின்றது. குறிப்பாக தலைநகர் டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், அரியானா மாநிலங்களில் கடும் மழைபெய்து வருகின்றது.
இதற்கிடையே, கடந்த 3 நாட்களில் பெய்த மழையால் ஏற்பட்ட , வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இமாச்சலப் பிரதேசம் மிகவும் மோசமாகப் பாதிப்பு அடைந்துள்ளது.
குறிப்பாக 1,300 வீதிகள், 40 பாலங்கள் சேதமடைந்துள்ளன எனவும் 79 வீடுகள் முற்றிலுமாக தரைமட்டமாகியுள்ளன எனவும் 333 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன எனவும் இதனால் இலச்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
,