எவரெஸ்ட் பகுதியில் ஏற்பட்ட விமான விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு அத்தியாவசியமற்ற முறையில் விமான பயணங்களை நேபாள விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்துள்ளது.
எவரெஸ்ட் சிகரம் உள்ளிட்ட இமயமலைச் சிகரங்களைப் பார்த்துவிட்டுத் திரும்பும் போது, விமானம் விபத்துக்குள்ளானதில், ஐந்து மெக்சிகோ சுற்றுலாப் பயணிகளும், தனியார் ஆயயெபெ யுசை நிறுவனத்தால் இயக்கப்படும் சிறிய விமானத்தின் நேபாள விமானியும் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
இந்த நிலையில் அத்தியாவசியமற்ற விமானங்களின் பயணங்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை இடைநிறுத்தப்படும் என நேபாளத்தின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (CAAN) தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அத்துடன் நேபாளத்தில் பெய்து வரும் பருவமழை காரணத்தினால் இந்த விபத்து சம்பவத்து இருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இதேவேளை கடந்த ஜனவரி மாதத்தில் சுற்றுலா நகரமான Pokhara அருகே விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 71 பேர் உயிரிழந்தனர்.
நேபாளத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இடம்பெற்ற கடும் மோசமான விபத்து இதுவென அந்த நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.