ஹட்டன் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் செல்லும் தனியார் பேரூந்துகள் ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளினால இன்று (வியாழக்கிழமை) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற பேரூந்து விபத்துக்கள் காரணமாக இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இவ்வாறு இடம்பெற்ற பரிசோதனைகளில் சில பேரூந்துக்களில் டயர்கள் பொருத்தமற்ற நிலையில் இருப்பதும், சில பேரூந்துகளின் துணைக்கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதும் மற்றும் ஓட்டுனர் உரிமம் இன்றி பஸ்களை செலுத்துவதும் உறுதி செய்யப்பட்டதாக வாகனப் பிரிவின் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.