வவுனியாவில் இருந்து செட்டிகுளம் வரை தினமும் இயக்கப்படும் கடைசி இரவு பஸ்ஸில் போதிய இடவசதி இல்லாததால் அந்த பஸ்ஸில் உயிரை பணயம் வைத்து பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பஸ்ஸிற்கு மேலதிகமாக பஸ் ஒன்றை வழங்குமாறும் அல்லது வவுனியா மற்றும் செட்டிகுளத்திற்கு இடையில் இரண்டு பஸ்களை இயக்குமாறு இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகளிடம் பயணிகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியா அலுவலகங்களில் வேலை செய்பவர்களும், கடைகளில் வேலை செய்பவர்களும் தினமும் வேலை முடிந்து இந்த பஸ்ஸிலேயே பயணிக்கின்றனர்.
பஸ்ஸில்; இடம் போதாததால், பஸ்சின் மேற்கூரையிலும், சரக்குகளை வைப்பதற்காக ஒதுக்கப்பட்ட சிறிய பகுதியிலும் ஏராளமான பயணிகள் சவாரி செய்கின்றனர்.
இந்த பயணம் மிகவும் ஆபத்தான பயணமாக இருந்தாலும், இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள் தகுந்த மாற்று நடவடிக்கையை இது வரை பின்பற்றவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும் .