ஜப்பானிய அரசின் கடனுதவியுடன் புதிதாக கட்டப்பட்ட கோல்டன் கேட் கல்யாணி (Golden Gate Kalyani) பாலத்தில் சுமார் 28 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான செப்பு கம்பிகள் மற்றும் ஆணிகள் மாயமாகியுள்ளன.
குறித்த இடத்தில் போதைக்கு அடிமையானவர்கள் பெறுமதியான செப்பு கம்பிகள் மற்றும் ஆணிகளை எடுத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் மின்சார வயர்களை கூட அறுத்துள்ளதாகவும் இதன் காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் ஒளிரச்செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.