21 வயதான யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழு இன்று பேராதனை வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.
வழங்கப்பட்ட தடுப்பூசி மரணத்தை ஏற்படுத்தவில்லை என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் விஞ்ஞான ரீதியான விசாரணையின் ஊடாக உண்மையை அறிய முடியும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தடுப்பூசி போடப்பட்ட 12 பேர் பேராதனை வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தீபனி என்ற யுவதி வயிற்றுப்போக்கு காரணமாக கடந்த திங்கட்கிழமை கட்டபிட்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அன்றிரவு பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சை வழங்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த யுவதி மரணத்திற்கு அவருக்கு செலுத்தப்பட்ட ஊசியே காரணம் என்றும் அதன் காரணமாகேவே நோய்வாய்ப்பட்டு இறந்ததாகவும் அவரது தாய், தந்தை உட்பட உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.