மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 141 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 5 இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடவுள்ளது.
அதன்படி டொமினிகா மைதானத்தில் கடந்த 12 ஆம் திகதி அரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 150 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக அலிக் ஏத்தனஸ் 47 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக அஷ்வின் 5 விக்கெட்களையும் ஜடேஜா 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து தந்து முதல் இந்நிக்ஸை தொடர்ந்த இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜேஷுவால் முதல் போட்டியிலேயே 171 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணிக்கு வலுசேர்த்தார்.
அதன்படி 5 விக்கெட்களை இழந்து 421 ஓட்டங்களை இந்திய அணி பெற்றுக்கொடுக்க அவ்வணி சார்பாக ரோஹித் சர்மா 103 ஓட்டங்களையும் விராட் கோலி 76 ஓட்டங்களையும் பெற்றுகொடண்டனர்.
தொடர்ந்து 291 ஓட்டங்கள் பின்னிலையோடு தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி 130 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
அவ்வணிசார்பாக அலிக் ஏத்தனஸ் 28 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் ரவிசந்திரன் அஷ்வின்
7 விக்கெட்களை சாய்தத்தர்., போட்டியின் ஆட்டநாயகனாக ஜேஷுவால் தெரிவு செய்யப்பட்டார்.