வெள்ள அனர்த்த அபாய நிலைமையை கருத்தில் கொண்டு சாய்ந்தமருது தோணாவை சுத்திகரிப்பு செய்யும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், கல்முனை மாநகர சபை, சாய்ந்தமருது பிரதேச செயலகம், சம்மாந்துறை பிரதேச சபை ஒருங்கிணைந்து இதனை முன்னெடுத்துள்ளன
2019 ஆண்டிற்கு பின்னர் 3 வருடங்களாக எவ்வித புனரமைப்பும் இன்றி குறித்த தோணா காணப்பட்டதுடன் வெள்ள அனர்த்தம் சுற்றுச்சூழல் மாசடைதல் உருவானதுடன் மக்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இதனை கட்டுப்படுத்தும் முகமாக அண்மையில் நடைபெற்று முடிந்த பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இத் தோணா சீர் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக இப்பணி முன்னெடுக்கப்படுகிறது.
மேலும் தோணா சுத்திகரிப்பு வேலைத்திட்ட மேற்பார்வை பணிகளில் சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கல்முனை மாநகர சபை மேற்பார்வை உத்தியோகத்தர் யூ.கே.காலித்தீன் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.