ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு சவால் விடுத்த வாக்னர் கூலிப்படையினர் பெலரஸ் வந்தடைந்ததை உக்ரைன் உறுதிப்படுத்தியுள்ளது.
நேற்று சனிக்கிழமை அதிகாலை சுமார் 60 வாக்னர் வாகனங்கள் உக்ரைன் எல்லையை கடந்து பெலரஸ் சென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் எத்தனை பேர் உள்ளனர் என்பதை தற்போது மதிப்பீடு செய்து வருவதாக உக்ரைன் எல்லைக் காவலர் சேவை வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.
பிரிகோஜின் தலைமையிலான வாக்னரின் கூலிப்படையினர் ரஷ்யாவைக் கைப்பற்ற கிளர்ச்சியைத் தொடங்கிய போதும்அது இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் கைவிடப்பட்டது.
பிரிகோஷின் பெலரஸ் செல்லவுள்ளதாக அறிவித்த போதிலும், அவர் தற்போது எங்கிருக்கிறார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.