தெற்கு ஐரோப்பா பகுதிகளில் அடுத்த வாரமும் கடும் வெப்பமான வானிலை தொடரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இத்தாலி, ஸ்பெயின் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் ஏற்கனவே கடந்த சில நாட்களாக அதிக வெப்பம் நிலவி வருகிறது.
இத்தாலியின் சுகாதார அமைச்சு, ரோம், போலோக்னா மற்றும் புளோரன்ஸ் உள்ளிட்ட 16 நகரங்களுக்கு வார இறுதியில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சர்டினியாவில் 48 பாகை செல்சியஸ் வரையில் வெப்பநிலை தொடரும் எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கு கடந்த 2021ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 48 தசம் 8 பாகை வரையில் அதிகரித்த வெப்ப நிலை பதிவாகியிருந்தது.
எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 23ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதிகளில் வெப்பநிலை உச்சத்தை எட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.