தென் கொரியாவில் தொடர்மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வடைந்துள்ளது.
தென்கொரியாவின் Gyeongju-si உள்ளிட்ட 13 நகரங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறான சீரற்ற காலநிலைக் காரணமாக 100 இற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
அததுடன் தென்கொரியாவின் முக்கிய சில நகரங்களுக்கான ரயில் சேவைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.